பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றிருப்பதால் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
