இலங்கையில் இந்தியாவின் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுக் கொழும்புக்கு அழைத்துச் செல்லவும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும் உதவி வருகின்றனர். இலஙகை விமானப் படையினருடன் இணைந்து இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய விமானப்படையினரால் நேற்று (30) கொத்மலை பகுதியில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் குழு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் இவர்களுள் அடங்குவர். இந்தியா, அவுஸ்திரேலியா, ஜேர்மன், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை முதலான நாடுகளின் பிரஜைகள் மீட்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
இந்திய அரசாங்கத்தால் மீட்பு பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்திய விமானப்படையின் MI 17 ஹெலிகொப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டு கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






