தித்வா புயல் தாக்கத்தால் உயிரிழந்தோர் தொகை 132 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தேநேரம் 102,877 குடும்பங்களைச் சேர்ந்த 373,428பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
