தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்சாரம் துண்டிப்பு: இலட்சக் கணக்கான தொலைபேசி பாவனையாளர்கள் பாதிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் தொலைத் தொடர்பு கோபுரங்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல இலட்சக் கணக்கான தொலைபேசி, அலைபேசி பாவனையாளர்கள் சிக்னல் (சமிக்ஞை) இல்லாமல் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இயற்கை அனர்தத்த்தால் பாதிக்கப்பட்டுள்ள தமது உறவுகளுடன் தொடர்புகொள்ளவில்லை என்று முறையிடுகிறார்கள்.
இதுபற்றி முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் அரச உயர் மட்ட அதிகாரிகள் இன்று கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலகம், கிளின் சிறிலங்கா செயலகம், டிஜிட்டல் அமைச்சு, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.
எனினும், அனர்த்தப் பகுதிகளுக்குச் சென்று மின்சார விநியோகத்தைச் சீரமைக்க முடியாத நிலை உள்ளதாகவும் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து துரிதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
