தலவாக்கலை பிளிகண்டாமலை தோட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளிகண்டாமலை தோட்ட மக்கள் தோட்ட உரிமையாளருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் தொடுக்கப்ட்ட வழக்கிற்கமைய இன்று தோட்ட உரிமையாளருக்கு எதிராக தடை உத்தரவு பிறபித்துள்ளது.
தோட்டத்தின் 45 குடும்பங்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இறுதியாக இந்த தோட்டத்தை வாங்கிய உரிமையாளர் மக்களின் அடிப்படை வசதிகளுக்கு தடை ஏற்படுத்தி வந்ததன் காரணமாக தோட்ட மக்கள் தற்போதைய உரிமையாளருக்கு எதிராக வழக்கை தொடர்ந்தனர்.
குறிப்பாக தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியை விடைமறித்தல், தோட்டமக்கள் விவசாயத்தில் ஈடுபட்ட காணிகளை அபகரித்தல், தோட்டத்தில் இருந்த பழைய பாடசாலை கட்டிடத்தை சுபகரித்தல், மக்களின் குடிநீர் விநியோகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமை போன்ற பல்வேறு காரணிகளுக்கு எதிராகவே மக்கள் வழக்கை தொடர்ந்தனர்.
இதன் அடிப்படையில் தோட்டத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு முடியும் வரை அவரால் எந்த விதமான செயற்பாடுகளையும் தோட்ட எல்லைக்குள் முன்னெடுக்க முடியாது என மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தலவாக்கலை பிளிகண்டாமலை தோட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை தொடர்பான நீதிமன்ற அறிவித்தல் தோட்ட உரிமையாளருக்கும் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்படும் என சட்டத்தரணி சுரேஷ் தெரிவித்தார்.
கௌசல்யா
