44 ஆண்டுகளாக இயங்கும் லக்கம் உப தபாலகத்தை மூடிவிட முயற்சி மேற்கொள்ளப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட லக்கம் நகரில் உள்ள உப அஞ்சல் காரியாலயத்தை மூடி விட போவதாக அஞ்சல் திணைக்கள நுவரெலியா மாவட்ட உயர் அதிகாரி முடிவு. செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈபட்டனர்..
அதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் இன்னும் அவ்வாறான முடிவு இல்லை எனத் தெரிவித்தனர்.
1981 ஆம் ஆண்டு காலப் பகுதியில் திறக்கப்பட்ட இந்த உப தபால் அஞ்சலகம் கடந்த 44 ஆண்டு காலமாக திறந்து இருந்த போதிலும் அஞ்சலகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்பதாலும் அங்கு கடந்த எட்டு ஆண்டு காலமாக திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளின் தாய் அஞ்சல் அதிபராக தனிமையில் கடமை புரிந்து வருவதாகவும் மாற்றம் வந்த போதும் வேறு எவரும் வராத காரணத்தால் விட்டு செல்ல முடியாது உள்ளது என்றும் தெரிவித்தார்.
அங்கு வந்த அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் மேலும் ஒரு வருடம் அவகாசம் தருவதாகவும் இனி வரும் காலங்களில் 320/ஐ பிரிவில் உள்ள மக்கள் இணைந்து அஞ்சலக வருமானம் பெற்றுத் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
