ஹற்றன் டிக்கோயா மாணிக்கவத்தை இரண்டாம் பிரிவைச் சேர்ந்த மனோகரன், மகேஸ்வரி தம்பதியின் புதல்வி விஷாலினி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், இசைத்துறையில் சிறப்பு இளங்கலை நுண்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இவர் தனது குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார்.தனது ஆரம்பக் கல்வியை மாணிக்கவத்தை தமிழ் வித்தியாலயத்தில், ஆறு தொடக்கம் சாதாரண தரவரையிலும் புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்திலும், உயர்க் கல்வியை ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியிலும், கற்று தனது சமூகத்துக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
