லக்சபானை, வாழமலை பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் நால்வர் வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
தேயிலைக் கொழுந்து பறித்து விட்டுத் தங்களது பணியை முடித்து வீடு திரும்பிய வேளையில், குளவிக் கொட்டுக்கு இலக்கான இவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டனர்.
மீனாம்பாள் வயது 52, செல்லம்மாள் வயது 60, யசோதா வயது 41, திருச்செல்வி வயது 41 ஆகிய நால்வரே அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்
