இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) நவராத்திரி விழா ஆரம்ப நாள் பூசை வழிபாடு ஆரம்பமானது
இரத்தினபுரி சிவாலய பிரதம குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகின.



இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்
தொடர்ந்து ஒன்பது நாள்கள் பூசை வழிபாடுகள் நடைபெறும். நிறைவு நாளான இம்மாதம் 22 ஆம் திகதி விஜயதசமி பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கலை விழாவும் நடைபெறும்.
