கொட்டகலை கிரிக்கெட் அகடமியின் தலைவர் ஸ்ரீயின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்டத்தினை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் NPL (நுவரெலியா பிரிமியர் லீக் )16 அணிகளுக்கான வீரர்களைத் தெரிவு செய்யும் சர்வதேச தரத்திற்கு நிகரான அங்குரார்ப்பண ஏல நிகழ்ச்சி,கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் கொட்டகலை ரிஷிகேஷ் வரவேற்பு மண்டபத்தில் (இன்று)இடம்பெற்றது.



இந்நிகழ்வில் சுற்றுப்போட்டிகளில் போட்டியிடும் பதினாறு அணிகளுக்குமான வீரர்கள் அவ்வணிகளின் முகாமையாளர்களினால் சர்வதேச முறைகளுக்கு ஒப்பான வகையில் ஏலமூலமாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
அப்போது தலைவாக்கலை RDM ராஜேஷ்,ஹில் கூல் உரிமையாளர் நிஷாந்தன், நுவரெலியா கிரிக்கெட் சம்மேளனத்தின் செயலாளர் பிரபா,ரிஷிகேஷ் மண்டபத்தின் உரிமையாளர் நவநீதன், வீரர்களை ஏலத்தில் எடுக்கும் உரிமையாளர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
