புசல்லாவை மெல்போட் தோட்டத்தின் அடையாளம் எனத் திகழ்ந்த மஞ்சள் மரம் சரிந்து வீழ்ந்து மக்கள் மனத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தோட்டத்தின் பாதையில் செல்வோரை வரவேற்குமாற்போல் நீண்டகாலமாகப் பூத்துக்குலுங்கிய பழைமையான மஞ்சள் ட்ரம்பெட் மரம் (Yellow Trumpet Tree) கடும் மழையினால் சரிந்து வீழ்ந்தது.
எனினும், யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று முன் தினம் (26) பெய்த கடும் மழையின்போதே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.


பல ஆண்டுகளாக அந்தப் பகுதியின் இயற்கை அழகின் ஒரு பகுதியாகவும், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்த இந்த மரத்தை இழந்தது கவலைக்குரிய விடயமாகும் என பொது சனம் வருத்தம் தெரிவிக்கின்றது.
ரொபரொசியா (Robarosia) மரக்கன்றுகளை நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் புசல்லாவை பகுதி அமைப்பாளர் இருசன் பிரதீப் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை, தோட்டம் நிர்வாகத்துடன் கலந்துரையாடி தேவையான ஏற்பாடுகளைச் செய்து, கூடிய விரைவில் அதே இடத்தில் அந்த மரக் கன்று நடப்படும் என அவர் கூறினார்.
பன்விலை ம. நவநீதன்
