நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர இந்தியா நிதி உதவி அளித்துள்ளது.
நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையலான பயணிகள் கப்பல் சேவை தொடர அடுத்த ஓராண்டுக்கான நிதி உதவியை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
வருடாந்த கப்பல் சேவைக்காக இந்திய அரசு 300 மில்லியன் இலங்கை ரூபாய் நிதி உதவி அளிக்கின்றது.


இந்தக் கப்பல் சேவை கடந்த 2024 ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் காலப் பகுதியில் இடம்பெற்ற கப்பல் சேவையில் சுமார் 52 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
-இந்திய உயர்ஸ்தானிகராலயம்-கொழும்பு
