அனோஜனைக் காப்பாற்றுமாறு கஜன் எம்பி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும் அவருக்கு சட்டரீதியான; இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று வெள்ளிக்கிழமை (18) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்L, ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்ட னையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
அவரது விடுதலைக்காக மேன்முறையீடு செய்தபோது, சிறைத்தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.
