புதிய கல்வி சீர்திருத்ததிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு வாதப் பிரதி வாதங்கள்
நிலவுகின்றபோதும் பாடசாலை மட்டத்தில் அதை கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்விப் பணிப்பாளர்கள் அசிரிய ஆலோசகர்கள் வளவாளர்கள் அத்தோடு பாடசாலை மட்டத்தில் புதிய கல்வி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்கள் என பலதரப்பட்டோரும் பயிற்றப்பட்டு வருகின்றனர்.
தித்வா புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட காலநிலை சீர்கேட்டினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தைத் தொடர்ந்து தரம் 1 தரம் 6 ஆகிய வகுப்புகளில் 2026 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்ட சீர்திருத்தத்திற்கு அமைவாக பாட வேளைகளின் நேர மாற்றத்தையும் பாடசாலை நேரத்தில் நேர மாற்றத்தையும் ஏற்படுத்துவது தற்காலிகமாகப் பிற்போடப்பட்டுள்ளது.
வழமை போலவே நடைமுறையிலுள்ள பாடசாலை நேரத்தைக் கொண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை நடை முறைபடுத்துவது தொடர்பாகவும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தத்தை செயல் திறனான வகையில் பாடசாலையில் நடைமுறைப்படுத்துவதற்கு பாடசாலை உள்ளக மதிப்பீட்டுச் செயன்முறையை காத்திரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான பயிற்சிகளையும் தெளிவையும் அதிபர்களுக்கு வழங்குவதற்காக விசேட அதிபர்களுக்ககான கூட்டம் ஒன்று வத்தேகம கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.
தமிழ் சிங்கள பாடசாலை அதிபர்களுக்கு பயிற்சியுடன் கூடிய இந்த செயலமர்வை வத்தேகம வலயக் கல்விப் பணிப்பாளர் று. ஆ.வுN.குணரட்ண ஏற்பாடு செய்திருந்தார்.குண்டசாலை ளு.று.சு.னுரூபவ்பண்டாரநாக்க தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்; சிங்கள வளவாளர்கள் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான விளக்கத்தை வழங்கினர்.
வத்தேகம கல்வி வலயத்தைச் சேர்ந்த சகல தமிழ் சிங்கள பாடசாலை அதிபர்களும் வளவாளர்களும் கல்விப் பணிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பன்விலை ம. நவநீதன்



