கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பஸ், ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி உடர் நசிந்து உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது பஸ்ஸின் சாரதி இருக்கைப் பக்கக் கதவு திறந்துகொண்டதால் அதனை மூடுவதற்கு முயற்சித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பஸ் குடைசாய்ந்து விபத்து நேர்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
