இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்!
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான சனிக்கிழமை மாலை யுவதியுடன் சென்ற இளைஞர் அப்பர் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளமை ஹப்புகஸ்தன்னை தோட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்த யுவதிது கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபி ஷானி (20) நீர்த்தேக்கத்தில் தள்ளிவிடப்பட்டாரா அல்லது குதித்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுபிடித்ததன் பின்னர் அந்த இடத்திற்கும் சந்தேக நபர் சென்று வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவ்விடத்தில் அவரது காலணிப் பட்டி கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் அணிந்திருந்த றப்பர் கைப்பட்டி இறந்த யுவதியின் கையில் இருந்நதாகறுவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
பேபி ஷானியை சந்தேக நபர் சம்பவ தினம் அவரை பஸ்ஸிலிருந்து இறங்கியதும் உடன் அழைத்துச் சென்றமையும் தெரியவந்துள்ளது.
தற்போது இவர் லெல்லுப்பிட்டி, பானகொடை தோட்டத்திற்குத் தப்பிச்சென்றிருப்பதாகவும் அவரைக் கைதுசெய்ய வேவல்வத்தைப் பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மலைக்குருவிக்குத் தெரியவருகிறது.
சந்தேக நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி இன்று காலை கம்பி அடி – செட்டிக்கடை பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மிகவும் கட்டுக்கோப்பான கலாசாரத்தைப் பேணும் வேவல்கட்டி தோட்டத் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மலைக்குருவி
