அட்டன் நகரத்திலிருந்து இறுதிச் சடங்கு ஒன்றுக்காக பொருள்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் விழுந்ததில் லாரியின் ஓட்டுநர் படுகாயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாக அட்டன் காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்து நேற்று முன்திம் இரவு 8:00 மணியளவில் அட்டன் கோவில் தெரு சாலையில் நடந்தது.
ஆரியகம பகுதியில் நடந்த இறுதிச் சடங்கு ஒன்றுக்காக பொருள்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி, மீண்டும் அட்டன் நகரத்திற்க்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, மழை காரணமாக பார ஊர்தி சறுக்கி தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது.
விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் மட்டுமே பார ஊர்தி யில் இருந்ததாக அட்டன் காவல்துறை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹட்டன், நுவரெலியா மற்றும் ஹட்டன் கண்டி ஆகிய நகரங்களின் பிரதான சாலைகள் மற்றும் பக்கவாட்டு சாலைகளில் தொடர்ந்து மழை பெய்யும் போது வழுக்கும் தன்மை உள்ளதால், வாகனம் ஓட்டும்போது கவனமாக வாகனம் செலுத்துமாறு அட்டன் காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
மஸ்கெலியா நிருபர்


