தலவாக்கலை பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும். தரம் 09 மாணவனை வேறு பாடசாலையில் சேர்ப்பதற்காக விடுகைப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ள பாடசாலைக்குச் சென்ற பெற்றோருக்கும். பாடசாலை அதிபர், காவலாளி ஆகியோருக்கு. இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறி உள்ளது
அப்போது பெற்றார். ஒருவர் தாக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர் ,
அத்தோடு பாடசாலை நிர்வாகமும் பெற்றோர் தவறான முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கௌசல்யா
