முத்தம் கொடுக்க முயன்ற காதலனின் உதட்டைக் கடித்து துப்பிய கள்ளக்காதலி தொடர்பில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச கான்பூரில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சாம்பி என்ற திருமணமான 35 வயது வாலிபர், அதே கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணைக் கள்ளத்தனமாகக் காதலித்து வந்துள்ளார்.
அந்தப் பெண்ணும் இணக்கம் தெரிவித்ததால் இருவரின் காதல் பயிராகி, செடியாகி மரமாகி வளர்ந்து வந்துள்ளது.
இதனிடையே, அந்த இளம்பெண்ணுக்கு வீட்டில் பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால் கள்ளக்காதலை முறித்துக்கொள்ளும்படி சாம்பியிடம் அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
ஆனால், அதை ஏற்கமறுத்த சாம்பி தன்னுடன் தொடர்ந்து கள்ளக்காதலில் இருக்கும்படி அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இளம்பெண் செவ்வாய்க்கிழமை (18) அன்று மதியம் கிராமத்தில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த கள்ளக்காதலன் சாம்பி இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் முத்தம் கொடுக்க வந்த தனது கள்ளாதலன் சாம்பியின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். சாம்பி இரத்தம் சொட்டச் சொட்ட பலத்த காயத்தோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
