ஹோர்மூஸ் நீரிணை அனைத்து வர்த்தக கப்பல்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் ஆனால், அமெரிக்கா தங்களுடைய கடற்படையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் பிரிக்ஸ் வெளியுறவுத்துறை மந்திரிகளுக்கான கூட்டம் நேற்று (14) நடந்தது. இதில் அந்தக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் ஒரு பகுதியாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியின்போது, ஹோர்மூஸ் நீரிணையானது, அமெரிக்க ஆக்கிரமிப்பால், அதன் முற்றுகையால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
எங்களுடைய பார்வையில், ஹோர்மூஸ் நீரிணை அனைத்து வர்த்தக கப்பல்களுக்காகவும் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் எங்களுடைய கடற்படையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாங்கள் எந்தத் தடையையும் உருவாக்கவில்லை. அமெரிக்காவின் முற்றுகையால் அஃது உருவானது. அமெரிக்காவால் உருவான இந்த தடுப்பு நடவடிக்கைகளை நீக்கினால், இந்தச் சிக்கலான நிலைமை முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.
