மலையகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் சுற்றிலும் தேயிலை செடிகளால் சூழப்பட்டு நாடிவரும் பக்தருக்கு பூரண அருள் வழங்கும் மீனாட்சி தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ள
அதன்படி மாசி மாதம் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை 15 02 2026. மாலை 6:00 மணிக்கு முதலாவது சாம கால ் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு 16 ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை 4 சாம கால பூஜைகளும் அரங்கை அதிரவைக்கும் கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. #
நான்கு ஜாம கால பூஜைகளின் கிரியைகள் கொட்டகலை வேலு ரா. சத்தியமூர்த்தி சர்மா தலைமையில் இடம் பெறும்.
மிகப் பிரசித்தி பெற்ற பயிற்றுவிப்பாளர்களினால் எமது ஆன்மிகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலை கலாசார நிகழ்வு மேடை ஏற்றப்படுவது விசேட அம்சமாகும் .
நிகழ்ச்சி நிரல்
இரவு. 08.00. மணிக்கு விசேட விருந்தினர்களை பூச்செண்டு கொடுத்து வரவேற்றல்.
இரவு 09.00. மணிக்கு இரண்டாம் ஜாமகால விசேட பூஜை.
இரவு 09.30. மங்கல விளக்கேற்றல்
இரவு 10.00. மணிக்கு விசேட வரவேற்புரை
இரவு 10.20. வரவேற்பு நடனம் குயில் வத்தை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள்
தொடர்ந்து நள்ளிரவு 12.00 மணி வரை லொனாக் தமிழ் மஹா. வித்தியாலயம், குயில்வத்தை. சென்னன் வட்டவள ஹைலண்ட்ஸ் ஆகிய கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் கலை கலாசார நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம் பெற உள்ளது.
நள்ளிரவு 12. 00 மணிக்கு மூன்றாவது விசேட ஜாம கால பூஜை.
தொடர்ந்து நள்ளிரவு மூன்று மணி வரை மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்
தொடர்ந்து. நள்ளிரவு மூன்று மணிக்கு சிவராத்திரி விழாவின் இறுதி நான்காவது ஜாம கால பூஜை இடம்பெறும்
நள்ளிரவு 03.30 நன்றியுரை
நள்ளிரவு 03.45. நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவு பெறும்
இப்பிரதேசத்தில் வாழும் அனைத்து இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் அனைவரும் இணைந்து நிகழ்வை சிறப்பாக நடத்தி முடிக்க உங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்
மீனாட்சி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஊடகப்பிரிவு.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. பிரகாஷன். ஜீவன். ஸ்ரீ சக்தி இளைஞர் கழக உறுப்பினர் மீனாட்சி தோட்டம். வட்டவளை.
### குறிப்பு. பூஜைக்கு தேவையான பால், பழம், வில்வம் இலை போன்றவைகளைக் கொடுக்க விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கவும்.
தொடர்புகளுக்கு. 0764548603. ஜீவன்.
வட்டவளை கேதீஸ்
