லொனக் தோட்ட இளைஞர் பிரதிநிதிகளுக்கும் அம்பகமுவ பிரதேசபை சபை தலைவர் கப்பில நாகந்தல அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பி.பகல் 1.00 மணியளவில் அம்பகமுவ பிரதேசபை அலுவலகத்தில் நடைபெற்றது
அம்பகமுவ பிரதேசசபையின் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரதேசபை உறுப்பினர் இரா. ஜீவன் இராஜேந்திரன் இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்
இக்கலந்துரையாடலில் லொனக் தோட்ட பாதை திருத்தம், முன்பள்ளி அபிவிருத்தி, தோட்டத்திற்கு அரச அலுவலர்களின் வருகையின் முக்கியத்தும் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கேதீஸ்வரன்

