மரம் நடுவோம் உலகை காப்போம்” என்ற கருப்பொருளுக்கு அமைவாக இலங்கையில் தேசிய மரம் நடும் தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சூரியன் அதிரடி நற்பணி மன்றம் மற்றும் செல்மின் அமைப்பு கடந்த 15.11.2025 டிலிகூல்ற்றி (நாகசேனை) பிரஜாசக்தி நிலையத்துடன் இணைந்து மரநடுகை நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது..
இயற்கை சூழலைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது. காடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விழிப்புணர்வுடன் கூடிய கருத்துகளும் எடுத்துரைக்கப்பட்டன.
மரம் நடும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. மாணவர்களையும், மக்களையும் ஊக்குவிக்கும் வகையில், சுற்றுச்சூழலை பராமரிப்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு என்பதை நினைவூட்டுவதாக இந்த நாள் அமைந்து உள்ளது.



