முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை கார் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.
10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த பெண்கள் இருவரும் ஆடவர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
