மாவிலாறு பகுதியில் மீட்பு. கண்காணிப்பு பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாவிலாறு பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை விமானப்படை இன்று (30) பல்வேறு வகை விமானங்களை உடனடியாக ஈபடுத்தியுள்ளது.
இதற்காக பெல்–412 ஹெலிகாப்டர், ஜெட் ரேஞ்சர் (206) ஹெலிகாப்டர், KA 360ER கண்காணிப்பு விமானம் மற்றும் MI-17 ரக ஹெலிகாப்டர் ஆகியவை முழுமையான மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடரும் கடற்படையினர்
வெள்ள நிவாரண, மீட்புப் பணிகளில் கடற்படையிர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய, மேல், வடமேல், சப்பிரகமுவை ஆகிய மாகாணங்களில் கடற்படையினர் மீட்பு, நிவாரணப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.



