மஸ்கெலியா ஸ்ரீ உபர ரத்தினா ஞாயிறு அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஏற்பாட்டில் வெசாக் பவனி இன்று நடைபெற்றது.
மஸ்கெலியா சுமனாராம விகாரையின் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், குடா மஸ்கெலியா ரக்காடு கிராம பௌத்த மக்கள்,மஸ்கெலியா நகரை அண்டிய பௌத்த மக்கள் ஒன்றிணைந்து இன்று 30, ஆம் திகதி காலை மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பூஜை பொருள்கள் சகிதம் பௌத்த நடனங்களுடன் மஸ்கெலியா இரண்டாம் சாலை வழியாக விகாரைக்குச் சென்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


