மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அருகில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்தது
இச் சம்பவம் இன்று மாலை 6 மணிக்கு இடம் பெற்றதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் இன்று மாலை வீசிய காற்றில் இந்த பாரிய மரம் சாய்ந்தது எனவும் அதனை அகற்ற நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.
