மஸ்கெலியா பொது மயானத்தில் சிரமதானம் நடைபெற்றது.
பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் செயற்படுத்தப்படும் 2026 உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (15) மஸ்கெலியா பொது மயானத்தில் சிரமதானம் நடைபெற்றது.



மஸ்கெலியா பிரதேசசபையின் தவிசாளர் தலைமையின் கீழ் உப தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், அலுவலக உத்தியோகஸ்த்தர்கள்,ஊழியர்களின் ஒத்துழைப்புடன் சிரமதானம் இடம்பெற்றது.
மேலும், இந்த நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ்,அதிரடி படையினரும் கலந்து சிறப்பித்துச் சிரமதான வேலைகளையும் செய்துகொடுத்தார்கள்.
