மஸ்கெலியா பிரதேச சபையின் முதலாவது ஆண்டின் பாதீடு மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
மஸ்கெலியா பிரதேச சபையின் முதலாவது 2026 ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டமை பெருமையுடன் அறிவித்தார் தவிசாளர் கந்தையா இராஜ்குமார்.
கெளரவ தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களின் தலைமைத்துவத்திலும், உறுப்பினர்களின் ஒற்றுமையான ஒத்துழைப்புடனும், பொதுமக்களின் நலனை முன்னிலைப்படுத்திய திட்டங்கள் மற்றும் சேவைகள் இந்த காலப்பகுதியில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அடிப்படை வசதிகள் மேம்பாடு, சுகாதார மற்றும் சுத்தம் நடவடிக்கைகள்,
வீதி, வடிகால் மற்றும் கட்டமைப்பு பணிகள்,
சமூக நல மற்றும் அவசர சேவைகள்,
இந்த வெற்றி, மக்களின் நம்பிக்கைக்கும், சபையின் பொறுப்புணர்ச்சிக்கும் கிடைத்த சான்றாகும். எதிர்வரும் காலப்பகுதியிலும் மஸ்கெலியா மக்களின் நலனுக்காக உறுதியுடன் செயல்படுவோம் என்றார்..
ஒற்றுமையுடன் – முன்னேற்றம் நோக்கி.
மஸ்கெலியா பிரதேச சபை
ஆதரவு : SJB 06
UNP 02
சுயேச்சை 02
10 ஆதரவு
எதிர்ப்பு : NPP 07
செ.தி. பெருமாள் ஸ்கெலியா நிருபர்
