மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு விழா அதிபர் என் பரமேஸ்வரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான 26 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து மாணவர்களின் பாண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாகப் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார, ஹட்டன் வலய கல்விப் பணி மனையின் அதிகாரிகள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டார்கள்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



