இந்த நிகழ்வு மஸ்கெலியா பி.எம்.டீ.கலாசார மண்டப வாயிலில் இன்று 10 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சிப்ஸ் நிறுவன தலைவர் எஸ்.டீ.கனேசலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார மற்றும் முன்னாள் சென் ஜோசப் தேசிய கல்லூரியின் அதிபர் எஸ்.பி.பரமேஸ்வரன், முன்னாள் சென் ஜோசப் கீழ் பிரிவு அதிபர் திருமதி ரா வெளிங்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வு மலையகத்திற்காக உயிர் கொடுத்த தியாகிகளுக்கும் கடந்த மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக மரணித்த அனைவருக்கும் மெழுகு வர்த்தி பற்றவைத்து ஒரு நிமிடம் நேரம் மௌன அஞ்சலி இடம் பெற்றது.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.
