மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாளகளாகக் கடும் வெப்பமான வானிலையும் குளிரான காலநிலையும் உள்ளது.
இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது.
மவுஸ்சாகலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்துள்ளது. அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 16 அடி குறைந்து உள்ளது.
மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான , பொல்பிட்டி, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர ஆகிய நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் சிறிது மழை பெய்த போதிலும் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயரும் சாத்தியம் இல்லை.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

