அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸின் தலைவருக்கும் மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் கலைஞர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
கலை ரீதியான பரஸ்பர பரிமாரல்கள்,மலையக நாடகத்துறை வளர்ச்சிக்கு கொழும்பிலே களம் அமைப்பது,மலையக கலைஞர்களை ஊக்குவித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் , விருது வழங்குதல்,தென்னிந்திய கலைஞர்களுடனான ஒரு இணைப்பு பாலத்தை உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் புசல்லாவை தமைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாலில்
மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் தலைவர் மலையக வாசுதேவன், செயலாளர் மருதமுத்து நவநீதன்,பொருளாளர் முப்புளி மகேஸ்வரன்,உப செயலாளர் சந்தனம் சத்தியநாதன், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பாடகர் எஸ் பி. .பாலசுப்ரமணியத்தின் நண்பரும் ஒரு கலைஞராகவும், சமூகக் கலை மற்றும் கலாசார பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவராகவும் விளங்கும் எம. அன்பழகன் வறுமைக் கோட்டின் கீழுள்ள பலரைத் தெரிவு செய்து பல்வேறு உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும்,தமிழ் சினிமாவில் பங்கு கொள்வதற்கு நம் நாட்டுக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தா.
பன்விலை ம. நவநீதன்
