நுவரெலியா மாவட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட பகுதிகளில் சம்பவிக்கும் மரணங்களின் மரண சான்றிதழ் சம்பந்தப்பட்ட நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து வழங்கப்படுவதில்லை என்று இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் விசனம் தெரிவித்தனர்.
குறிப்பாக கடந்த காலத்தில் மரணம் இடம் பெற்று தோட்ட வைத்திய அதிகாரிகள் மரண சான்றிதழ் எழுதி அதனைத் தோட்ட முகாமையாளர் உறுதி செய்து கினிகத்தேன உதவி அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்து ஒரு மாத காலத்தில் மரணித்தவரின் குடும்பத்தாருக்கு மரண சான்றிதழ் கிடைக்க பெற்றது.
நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவு ஆரம்பித்த பின்னர் இந்தச் சேவை முறையாக இடம் பெறுவது இல்லை என்று இப் பகுதியில் உள்ள மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மரணித்தவர்களின் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் வங்கி சேவைகள் தொடர மரண சான்றிதழ் இல்லாமல் இப் பகுதியில் உள்ள மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட அமைச்சர் நுவரெலியா மாவட்ட ஆட்சியர் துஷாரி தென்னகோன் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
