பிறந்த நாள் விழாவொன்றில் மனைவியிடம் சேட்டை புரிந்த நபரைத் தட்டிக்கேட்டகணவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இரத்தினபுரி பெரண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பெரண்டுவ தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த 37 வயது தொழிலாளி ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு பிறந்த நாள் வைபவமொன்றுக்குச் சென்றிருந்தபோது தன் மனைவியிடம் அந்த நபர் சேட்டை புரிய முயற்சித்தமை தொடர்பாக அந்த நபர் விசாரித்தபோது இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியபோது தட்டிக்கேட்ட கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தன் கணவரை அந்த நபர் தாக்கிவிட்டு ஓடுவதைக் கண்டதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி தாம் தனிமையில் வீட்டிலிருந்தபோது இந்தச் சந்தேக நபர் தன்னுடன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் எனினும், தாம் முயற்சித்துத் தப்பித்துக்கொண்டதாகவும் கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றியே நேற்று முன்தினம் பிறந்த நாள் விழாவில் சந்தித்துக்கொண்ட இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் வேலு யோகேஸ்வரன் பெத்தமணி என்பவரே உயிரிழந்துள்ளார். இறந்தவரின் மனைவியிடம் சேட்டை புரிய எத்தனித்தவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
சந்தேக நபரான அவரைக் கைதுசெய்துள்ள பொலிஸார் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதித்துக் காவல் காத்து வருகின்றனர்.
இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்
எஸ். ஆர். இரவீந்திரன்

