Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • Lifestyle
  • மண்ணின் மைந்தர் மலையக வாசுதேவன் கலாபூசணம் விருது பெற்றார்

மண்ணின் மைந்தர் மலையக வாசுதேவன் கலாபூசணம் விருது பெற்றார்

Malaikuruvi February 16, 2026 1 minute read
மண்ணின் மைந்தர் மலையக வாசுதேவன் கலாபூசணம் விருது பெற்றார்

மலையக நாடகக் கலைஞர் எம். வாசகம் அரசின் உயரிய விருதான கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

புத்த சாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து நடத்திய அரசின் கலாபூஷணம் விருது வழங்கும் விழாவிலேயே இவர் பாராட்டிக் கௌரிக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி கலாபூஷணம் விருது வழங்கும் விழா கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. அப்போது நாடகத் துறைக்காக இவர் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டம் கொத்மலை, இறம்பொடை, புரொடொப் மேமலை தோட்டத்தைச் சேர்ந்த இவர், இறம்படை இந்துக் கல்லூரியில் தான் கற்கின்ற காலம் முதல் இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.

இவர் 1993 ஆம் ஆண்டு முதல் 1998 ஆண்டு வரை நுவரெலியா, கண்டி, புசல்லாவை பிரதேசங்களில் பல்வேறு சமூக மேடை நாடகங்களை இயற்றித் தயாரித்து; நடித்து சமூக விழிப்பூட்டல்களை செய்து வருகிறார்.

1993 ஆம் ஆண்டு முதல் தேசிய ரீதியில் கொழும்பு மருதானை டவர் மண்டபம், எல்பின்ஸ்டன் மண்டபம், ஜோன் டி சில்வா மண்டபம் ஆகிய இடங்களில் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். “

வாடிய ரோஜாவைத் தேடிய ராஜா”, “பயணம் ஒன்று” “பணத்தால் வந்த வினை”, “இயேசுவின் வழியில் வாசு”, “எங்கே சுதந்திரம்”, “தீர்வு எப்பொது”, “புதிய சிந்தனை” போன்ற நாடகங்களை மேடையேற்றி சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த காட்சியமைப்பு, சிறந்த மேடை அலங்காரம், சிறந்த நாடகம், சிறந்த தயாரிப்பு எனப் பல விருதுகளைத் தனது நாடகத்திற்காகப் பெற்றுக் கொண்டுள்ளார்.

1998 ஆம் ஆண்டு மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாடகத் துறைக்காக விருதினைப் பெற்றுக் கொண்டார்.

2003 ஆம் ஆண்டு “புதிய சிந்தனை” நாடக நூலுக்கான மத்திய மாகாண தமிழ் சாகித்திய விருதினையும் பெற்றுக்கொண்டார்.

1996 ஆம் ஆண்டு முதல் மலையக நட்சத்திரக் கலைப் பேரவை என்ற ஓர் அமைப்பினை உருவாக்கிக் கடந்த இருபத்தொன்பது வருடங்களாக மலையக கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்குத் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.

கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள், சமூக சேவைகள், ஆன்மிக சேவைகள், விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் என்பவற்றை இவ்வமைப்பின் மூலம் நடத்தி வருகிறார்.

பல இளம் கலைஞர்களுக்குக் களமமைத்துக் கொடுத்து வருகின்ற மலையக வாசுதேவன், தற்பொழுது குறுந்திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாடசாலைகளில் நாடக பயிற்சிகளையும் வழங்கிவருகிறார்.

2005 ஆம் ஆண்டு அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் நியமனம் பெற்றுள்ளார்.

1980 ஆம் ஆண்டு “பாட்டுக்குப் பாட்டு” இசை நிகழ்ச்சியில் பாடகர் மலேசியா வாசுதேவனின் பாடலை சிறப்பாகப் பாடியதால் சிரேஷ்ட அறிவிப்பாளர் B.H அப்துல் ஹமீத் அவர்களால் மலையக வாசுதேவன் எனப் பெயர் சூட்டப்பட்டார். அன்று முதல் இவர் மலையக வாசுதேவன் எனப் புனைபெயரால் அழைக்கப்படுகின்றார்.

இந்த அரச விருது வழங்கும் விழாவில் 200 சிங்கள பிரிவுகளுக்கும் முப்பத்து மூன்று தமிழ் பிரிவுகளுக்குமாக விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிலேயே மலையக நாடகக் கலைஞர், மலையக வாசுதேவன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

பன்விலை ம. நவநீதன்

மண்ணின் மைந்தர் மலையக வாசுதேவன் கலாபூசணம் விருது பெற்றார்
மண்ணின் மைந்தர் மலையக வாசுதேவன் கலாபூசணம் விருது பெற்றார்

Post navigation

Previous: பத்மினியைக் கண்டால் வரச் சொல்லுங்கள்!
Next: க. பொ. த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

Related Stories

மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

Malaikuruvi March 1, 2026
மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது

மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது

Malaikuruvi March 1, 2026
கார்ட்மோர் தோட்டத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம்

கார்ட்மோர் தோட்டத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம்

Malaikuruvi March 1, 2026

Trending News

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 1

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 2

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 3

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026
மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள் 4

மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

March 1, 2026
மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது 5

மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026
மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்
  • மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |