மட்டக்களப்பு நகரில் ஜிவி வைத்தியசாலைக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்ட நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் அக்கரைப்பற்றுவில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுபவர் என்று தெரியவந்தள்ளது.
அதேநேரம், மட்டக்களப்பு நகரில் தற்கொலை செய்துகொண்ட இன்னொருவரின் சடலமும் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரவுக்குட்பட்ட பகுதியில் 21 வயது யுவதியொருவரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வரதன்
