உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி ஜெயரட்ணவின் வழிகாட்டலில் குறைந்த வருமானம் பெறும் உடபளாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொரகல கிராம சேவகர் பிரிவிலுள்ள 800 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் மருந்துப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
புசல்லாவை ஓல்ட் பீகொக் தோட்டம் சப்லி தோட்டம், நிவ் பீகொக் தோட்டம்,தொரகல கிராமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சகல இன மக்களும் நிவாரணப் பொதிகளைப் கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் எம.யோகேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு பயனாளிகள் பெரிதும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
பன்விலை நிருபர் ம.நவநீதன்






