உலக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக் குரலாக ஒலிக்கும் மே தினத்தில், நாட்டின் அபிவிருத்திக்காக இரவு பகல் பாராது உழைக்கும் அனைத்து தொழிலாளர் சகோதர சகோதரிகளுக்கும் எனது இதயம் கனிந்த மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக, இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும், தியாகமும் என்றும் போற்றுதலுக்குரியது. கடும் மழை, வெயில் என பாராது தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் உங்களின் உழைப்புக்கு இந்நாளில் தலை வணங்குகிறேன்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், சமூக உட்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. “போதையற்ற நாடு, ஊழலற்ற தேசம்” என்ற எமது இலக்கை அடைவதற்கு உழைக்கும் வர்க்கத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.
உழைப்பாளர் சக்தியே தேசத்தின் சக்தி. உங்கள் உரிமைகளை வென்றெடுக்கவும், கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தவும் நாம் என்றும் உங்களுடன் துணை நிற்போம்.
வளமான நாடு அழகான வாழ்க்கை
அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மே தின நல்வாழ்த்துகள்.
சுந்தரலிங்கம் பிரதீப்
பிரதி அமைச்சர்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு
01 மே 2026
