பிடிதளராதே அமைப்பின் மாதாந்த ‘பெரட்டுக்களம்’ சந்திப்பு தலவாக்கலை , பத்தனை – மவுண்ட்வேர்ணன் பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது.
பிடிதளராதே அமைப்பின் செயலாளர் தோழர் சுசிதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர், நாடகவியலாளர் மு. காளிதாசன், சமூக செயற்பாட்டாளர் – நாடகவியலாளர் கவிசான் உள்ளிட்ட அமைப்பு உறுப்பினர்களும், ஊர் மக்களும் பங்கேற்றனர்.
இதன்போது மலையக தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைக்கான முக்கியத்துவம் பற்றி உரைகள் இடம்பெற்றன.
காணி உரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நாடகம் மற்றும் நாட்டார் பாடல் என்பனவும் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியின்போது 44 ஆவது தேசிய இளைஞர் நாடக விழாவில் விருது சென்ற நாடகக் கலைஞர்களான செல்வராஜ் தர்ஷினி, லீஷா மஹால், யசோத் குமார், ராஜேஷ் கண்ணா ஆகியோரைப் பாராட்டி பிடிதளராதே அமைப்பு கௌரவித்தது.
கௌசல்யா



