அக்கரபத்தனை பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (03) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் – பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
டயகம கிழக்கு முதலாம் பிரிவு, டயகம மேற்கு 3ஆம் பிரிவு, டயகம மேற்கு 4ஆம் பிரிவு, போர்ட்மோர், வெவர்லி, ஆக்ரோயா, பெல்மரோல், மெரேயா, கொன்டோனியா, பிரேம்மோர், தங்ககலை, ஹோல்புரூக்’ உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்’ அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யு உலர் உணவுப் பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் அவர் வழங்கினா.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



