நுவரெலியாவில் பயணிகளை ஏற்றச் சென்ற விமானம் ஏரியில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் விமானிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியாவில் உள்ள கிறகரி ஏரியில் ஒரு சிறிய விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து புதன்கிழமை (07) மதியம் 12.30 மணியளவில் நடந்ததாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சொல்ல வந்த விமானமே (seaplane) இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விமானியும் துணை விமானியுமே காயமடைந்துள்ளனர்
கௌசல்யா.




