அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பதுளை – ஸ்பிரிங்வெளி பிரதேசத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அழிவடைந்த பாலத்திற்குப் பதிலாக பெய்லி பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது நினைவுக் கட்டத்தை எட்டியுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான இந்த வீதி, பிரதேசத்தில் மக்களின் அன்றாடத் தேவைக்காக தோட்டத்துறையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மிகவும் முக்கியமான வீதியாகும். பாலம் பாதிக்கப்பட்டதனால் பொதுப் போக்குவரத்துப் பணிகள் முழுமையாக தடைப்பட்டன.
பாலத்தின் சகல பணிகளும் நிறைவுற்று வாகனப் போக்குவரத்திற்கு வாய்ப்பளிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் எதிர்பார்க்கப்படுகின்றது.
