நோர்வூட் மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் சாயந்ததால் போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டன.
இச் சம்பவம் இன்று மாலை 5 மணிக்கு இடம் பெற்றுள்ளது.
இதனால் மஸ்கெலியா ஹட்டன் போக்குவரத்தில் துண்டிப்பு ஏற்பட்டது.
நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பாரிய வாகை மரம் சாய்ந்தது. மரத்தை வெட்டி அகற்ற நோர்வூட் பொலிசார் மற்றும் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
மஸ்கெலியா நிருபர்
