நோயாளிபோல் இயங்கும் மஸ்கெலியா மருத்துவமனை நிலவரத்தைப் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் ஆய்வுசெய்துள்ளார்.
மஸ்கெலியா பிராந்தியத்தில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்க வேண்டிய மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனை ஒரு நோயாளியைப்போல் இயங்குவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
நான்கு மாடிகளைக்கொண்ட இந்த வைத்தியசாலையின் இரண்டு மின்னுயர்த்திகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கவில்லை.
அம்பியுலன்ஸ் வண்டிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றன. அதனைத் திருத்தி நிமிர்த்த ஆளில்லை.பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேற்றுதான் (12) அங்குப் போய் நிலவரத்தை நேரில் அறிந்துகொண்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டப் பகுதிகளுக்கு முறையான பஸ் சேவை இல்லை. பாடசாலை மாணவர்கள் படும் துயரம் சொல்லிமாளாது. தோட்டப் பாதைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
மலையகப் பொழுதும் விடியத்தான் செய்கிறது. விடிவுதான் இல்லை!
– மலைக்குருவி
