நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
நோட்டன் பிரிட்ஜ் விமல சுரேந்திர நீர்த் தேக்க பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த லக்சபான இராணுவ முகாமைச் சேர்ந்த நான்கு வீரர்கள் மண்ணில் புதையுண்ட போதும் மூன்று இராணுவ சிப்பாய்கள் காப்பாற்ற பட்டார்கள்.
அவர்கள் நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தச் சம்பவத்தில் புதையுண்ட அனைவரும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
அவர் லக்சபான இராணுவ முகாமைச் சேர்ந்தவர் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற இருந்தவர் எனவும் அவர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.
மஸ்கெலியா நிருபர்
