நுவரெலியா மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒன்றுகூடல் நேற்று (07) டிக்கோயா பௌத்த விகாரையில் நுவரெலியா மாவட்ட சர்வமத செயற்குழு தலைவர் ஏ. நந்தகுமார், நுவரெலியா ஐயப்பன் ஆலய பிரதம குருக்கள் தலைமையில் சர்வமத செயற்குழு பிரதம செயற்பாட்டாளர் இரேஷா உதேனி அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றது.
நிகழ்வில் ஹட்டன் பிராந்திய மனித உரிமை நிறுவன அதிகாரி திருமதி.பழனியான்டி ஈஸ்வரி கலந்து கொண்டு தித்வா புயல் அனர்த்தத்தின் பின்னரான அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் சம்பந்தமாக விரிவாக எடுத்துக் கூறினார்.
மஸ்கெலியா நிருபர்


