நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (10) மாலை முதல் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. எங்குப் பார்த்தாலும் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் மலையக பகுதியில் வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் செலுத்த வேண்டும் எனப் போக்குவரத்துப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யுமாறு செல்லுமாறு ஹட்டன் வலய காவல் துறை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையக பகுதியில் மலைப் பாங்கான பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மஸ்கெலியா நிருபர்
