நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரகிரி வாவியின் ஓரத்தில் சிசு ஒன்றின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
காலை வேளையில் படகு சவாரி செய்யும் உரிமையாளர்கள் தமது தொழிலுக்காக காலை நேரத்தில் வருகின்றபோது இவ்வாறு சிசுவின் சடலத்தை கண்டு அருகில் இருந்த பாதுகாப்பு படையணிக்கு அறிவித்ததை அடுத்து நுவரெலியா போலீஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சிசுவின் சடலம் சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை வேளையில் படகு சவாரி செய்து வீடு திரும்பும் போது இந்த இடத்தில் இவ்வாறு சிசுவின் சடலம் காணப்படாத நிலையில் எவ்வாறு காலை வேளையில் சிசுவின் சடலம் குறித்து இடத்திற்கு வருகை தந்தது என அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் வழங்கியதை எடுத்து இவ்வாறு விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கௌசல்யா
