பருவநிலை மாற்றம் காரணமாக நாகை காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் நிறுத்தப்படும். மேலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படுமென்று சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது, சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகம் இலங்கையின் காங்கேசன்துறைக்கிடையே சிவகங்கை பயணிகள் கப்பலை இயக்கி வருகிறது.
இந்தக் கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
நாளுக்குநாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக புதிய கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் நவம்பர் மாதம் இறுதிக்குள் நாகை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
